×

வேம்பாரில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிதியுதவி

குளத்தூர், ஏப். 24: வேம்பாரில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார். குளத்தூர் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்த பாண்டி (48). பனை தொழிலாளியான இவர், கடந்த சில சில தினங்களுக்கு முன்பு பனையில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அவரது குடும்பத்தினரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏவுமான மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

மேலும் அரசின் சார்பில் உரிய நிவாரணத் தொகை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, துணை அமைப்பாளர்கள் மீனவரணி அந்தோணிராஜ், மகளிரணி எப்ரோமீனாமேரி, மகளிர் தொண்டரணி ஜெயந்தி, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் மாயாண்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post வேம்பாரில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Vembar ,Kulathur ,Markandeyan ,MLA ,Pandi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...