×

விளம்பரத்தில் நடித்து சம்பாதிப்பது போல சமூக வலைதளத்தில் பணம் குவிக்கும் விளையாட்டு வீரர்கள்

நியூஜெர்சி : சமூக வலைத்தளங்கள் தற்போது அதிக வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாகவே  மாறிவருகின்றன. யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து பலரும் லட்சக்கணக்கான ரூபாயை எளிதில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவு செய்யும் வீடியோக்களுக்கு  வருமானம் கொடுத்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் சாதாரணமானவர்கள் எளிதில் வருமானம் ஈட்ட முடியாது. பிரபலமாக உள்ள நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே கோடிக்கணக்கில் காசு பார்க்கின்றனர்.

ஒரு பிரபலத்தை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள்? அதில் அவர்களது போஸ்டை எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வரிசையில் 2018ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.  ஹோப்பர்எச்கியூ.காம் என்ற இணையத்தளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, ஃபாலோயர்கள், பதிவுகள்; அதற்கான கால இடைவெளி என பலவற்றை அலசி ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டது. இதில் அமெரிக்க டெலிவிஷன் பிரபலம் கெய்லி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது ஒரு போஸ்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுகிறார்.

இந்தியாவில் அதிக  வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார். இவரை 2 கோடியே 32 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிகம் பிரபலமான திறமை வாய்ந்த வீரராக விராட் கோலி இருப்பதால் இவரும்  கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். ஒரு பதிவுக்கு 83 லட்சம் பெறுகிறார்.மேலும் கோலி  விளம்பரங்களிலும் நடித்து அதிக சம்பளம் வாங்குபவர்களின்  பட்டியலில் இருக்கிறார்.கால்பந்து வீரர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது,  நெய்மர் 8வது,  மெஸ்சி 9 வது இடத்திலும் உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : money , social web site,Accumulating, athletes
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...