×

வேதாரண்யம் நகராட்சி சார்பில் உலக பூமி தின மரக்கன்று நடும் பணி

வேதாரண்யம்,ஏப்.26: வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் உலக பூமிதினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருடன் இணைந்து வேதாரண்யம் நகராட்சி சார்பில் கடற்கரை பகுதியில் மர கன்றுகள் நடுதல், மேலும் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர மன்ற தலைவர் வேதாரண்யம் திமுக நகர செயலாளர் புகழேந்தி தலைமை வகித்து மரக்கன்றுகளை நாட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி, நகர பணி மேற்பார்வையாளர் குமரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, மாணவர்கள மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்து பேசினார்.

The post வேதாரண்யம் நகராட்சி சார்பில் உலக பூமி தின மரக்கன்று நடும் பணி appeared first on Dinakaran.

Tags : World Earth Day ,Vedaranyam Municipality ,Vedaranyam ,Vedaranyam Sannathi ,Vedaranyam City Council… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...