×

வேதாரண்யம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேதாரண்யம், ஜூலை 21: வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் முகாமில் இடம் பெற்றது. இம் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இம்முகாமில் வேதாரண்யம்நகர மன்றதலைவர் புகழேந்தி ,நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, வட்டாட்சியர் வடிவழகன், நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். குடும்ப அட்டை உள்ளிட்ட சில கோரிக்கை மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யபட்டு அதற்கு உரியஆவணங்களைபயனாளிகளிடம் முகாமில் வழங்கினர்.

The post வேதாரண்யம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Vedaranyam ,Vedaranyam Municipal Garden Department ,Department of Rural Development and Supervision ,Department of Revenue and Disaster Management ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...