×

வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் நடந்த சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 

வேதாரண்யம், மே 9: வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் பாயிண்ட் காலிமர் பன்னாட்டு பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகம் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க விளையாட்டு கழகம் பாயிண்ட் காலிமர் பன்னாட்டு பள்ளி இணைந்து 11 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 279 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சிராஜ் நிஷா, சட்ட ஆலோசகர் சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் முகமது இப்ராஹிம், நிர்வாக அதிகாரி ஷேக் முகைதீன் சாலிஹ் இலக்குவனார், விளையாட்டு கழக தலைவர் இகே ராம், நிறுவனர் மணிமொழி, ஆர்விஎஸ் பள்ளி தாளாளர் சுவாமிநாதன், மாவட்ட விளையாட்டு கழக தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் நடந்த சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kuravapulam ,Vedaranyam ,Kuravapulam Point Calimer International School ,Vedaranyam taluka ,District Chess Sports Association ,Vaimedu Lakshmanar Chess Sports Association ,Point Calimer International School ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...