×

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் காய்கறி விலைகள் கிடுகிடு உயர்வு: கத்திரி 40 பீன்ஸ் ₹95க்கு விற்பனை

சென்னை: தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்ததால், சென்னையில் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 550 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் வருகின்றன. ஆனால் நேற்று காலை 450 வாகனங்களில் 4,000 டன் காய்கறிகள் மட்டும் வந்தன. ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ₹60லிருந்து ₹70க்கும், ஒரு கிலோ நாட்டு தக்காளி ₹55 லிருந்து ₹65க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கத்திரிக்காய் ₹25லிருந்து ₹40க்கும், பீன்ஸ் ₹80லிருந்து ₹95க்கும், பீர்க்கங்காய் ₹40 லிருந்து ₹60க்கும், கேரட் ₹35லிருந்து ₹45க்கும், பீட்ரூட் ₹25 லிருந்து ₹35 க்கும் விற்பனையாகிறது. புடலங்காய் ₹30 லிருந்து ₹40க்கும், வெண்டைக்காய் ₹30லிருந்து ₹40க்கும், மற்ற காய்கறிகள் ஒரு கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், ‘‘தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தற்போது மழை பெய்துவருவதால், காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. எனவே, அவற்றின் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.’’ என்றார்….

The post வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் காய்கறி விலைகள் கிடுகிடு உயர்வு: கத்திரி 40 பீன்ஸ் ₹95க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chennai Coimbade Market ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...