×

வெயிலுகந்த அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

விருதுநகர், ஜூன் 5: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. விருதுநகர் பராசக்தி வெயிலுகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அக்னிச்சட்டி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது விருதுநகர் பராசக்தி வெயிலுகந்த அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும். வைகாசி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா மே 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள், அம்மன் வீதி உலா நடைபெற்றது. பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று அக்னிச்சட்டி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஜூன் 8 அன்று திருவிழா நிறைவு பெறுகிறது

The post வெயிலுகந்த அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Veyluganda Amman Temple ,Virudhunagar ,Parasakthi Veyluganda Amman Temple ,Vaikasi Pongal festival ,Agnichatti festival ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...