×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு சூடுபிடிக்கும் தர்பூசணி பழம் விற்பனை

பரமக்குடி,ஏப்.18: பரமக்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேடைகாலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திலும் திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வாங்கி விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரவழைக்கப்பட்டு, பரமக்குடி பகுதியில் தர்பூசணி விற்பனை கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம் பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து தர்பூசணி விற்பனையாளர் கூறுகையில், திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகளில் தர்பூசணி பரமக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, சாலையோரங்களில் கூராடம் அமைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதா,ல் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு சூடுபிடிக்கும் தர்பூசணி பழம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...