×

வெங்கடாசலபுரம் பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டியின்கீழ் கழிவுநீர் தேக்கம்: சுகாதாரம் பாதிப்பு

 

சாத்தூர், அக்.2: குடிநீர் தொட்டியின் கீழே கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதாரம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ஆயிரம் குடியிருப்புகள் வரை உள்ளது. மேலும் வேகமாக வளரும் கிராமப் பகுதியாகும். இங்கு குடியிருப்புகளில் உள்ள போர்வெல்தண்ணீர் கடும் உப்பு தன்மையாக இருக்கிறது. எனவே என்.ஜி.ஓ.காலனி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பயன்பெறுவதற்காக திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீரை சேமித்து பின்னர் குடியிருப்புகளுக்கு வழங்க மேல் நிலை தண்ணீர் தேக்க தொட்டியும், வெங்கடாசலபுரம் கிராமத்திற்கு ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன.

தொட்டிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் தொட்டிக்கு கீழே ஆண்டு முழுவதும் தேங்கி கிடக்கிறது. தேங்கியிருக்கும் கழிவு நீரில் கால்நடைகள், பன்றிகள் வந்து சகதியில் தங்குகின்றன. மேலும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே மேல்நிலை தண்ணீர் தேக்க தொட்டிக்கு அருகில் செல்லும் வாறுகாலில் இந்தக் கழிவுநீர் செல்வதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post வெங்கடாசலபுரம் பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டியின்கீழ் கழிவுநீர் தேக்கம்: சுகாதாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Venkatachalapuram ,Chatur ,Venkatasalapuram ,
× RELATED சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் விறுவிறு