×

வீரபாண்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு

 

தேனி, மே 8: தேனி அருகே வீரபாண்டியில் நீர், மோர் பந்தலை தேனித் தொகுதி எம்.பி மற்றும் பேரூராட்சி சேர்மன் ஆகியோர் திறந்து வைத்தனர். தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில், பேரூராட்சியில் பேரூராட்சி சேர்மன் கீதாசசி சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை நேற்று பேரூராட்சி சேர்மன் கீதாசசி முன்னிலையில், தேனித் தொகுதி எம்.பி தங்கதமிழ்செல்வன் திறந்து வைத்தார். இதில் பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வீரபாண்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Veerapandi ,Theni ,Chithirai festival ,Gaumariyamman ,and buttermilk ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...