×

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

 

விருதுநகர், மே 27: பிரசவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இலவச வீட்டுமனை பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டி.சேடப்பட்டியை சேர்ந்த நர்மதா என்பவர் மனு அளித்தார். மனுவில், கன்னிசேரிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6.1.2024ல் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு நார்மல் பிரவசம் என கூறப்பட்ட நிலையில், அன்றைய தினமே மருத்துவர் இன்றி செவிலியர் மூலம் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை மூளை பாதிப்படைந்து பிறந்தது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன்.

விசாரணைக்கு பிறகு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர், பட்டா வழங்க உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் இன்று வரை அலுவலர்கள் எடுக்கவில்லை. விஏஓவிடம் கேட்டால் மறுபடியும் கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறுகின்றார். கலெக்டர் தலையிட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Narmada ,T.Sedapatti ,Virudhunagar Collector ,Kanniseriputhur Government Primary Health Center… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...