×

வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு

 

தர்மபுரி, ஜூன் 24: தர்மபுரி அடுத்த பிடமனேரி மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். கூலி ெதாழிலாளியான இவரது மனைவி குமுதவள்ளி. இவர்கள் கடந்த 21ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு கொண்டகரஅள்ளி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றிருந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைத்திருந்த 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Paramasivam ,Pitamaneri Manthope ,Kumudhavalli ,Kondakaralli ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...