×

விஷ்ணம்பேட்டை செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்கு முகூர்த்தகால்

 

திருக்காட்டுப்பள்ளி, மே 24: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டைசெல்லியம்மன் கோயிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இக்கோயிலில் செல்லியம்மன் சகோதரிகள்,  விநாயகர்,  வீரபத்திரர்,  மதுரை வீரன்,  கருப்புசாமி ஆகிய பரிவார மூர்த்திகளுடன் அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், இரவு காப்பு கட்டுதலும் நடைபெற்றன. வருகிற 28ம் தேதி (புதன்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி 30ம் தேதி வரை சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள், சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி மாவிளக்கு போடுதல், கிடா வெட்டுதல் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற ஜூன் 2ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் செல்லியம்மன்கோயில் ஆண்டுதிருவிழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post விஷ்ணம்பேட்டை செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்கு முகூர்த்தகால் appeared first on Dinakaran.

Tags : Mukhurthakal ,Vishnampet Selliyamman Temple festival ,Thirukattupalli ,Vishnampet Selliyamman Temple ,Thanjavur district ,Selliyamman ,Vinayagar ,Veerabhadrar ,Madurai Veeran ,Karupavamsi… ,Mukhurthakal for the Vishnampet Selliyamman Temple festival ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...