×

விவசாய நிலங்களுக்கு போதிய நிவாரண தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

 

திண்டுக்கல், மே 27: திண்டுக்கல் அருகே கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு போதிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெருமாள், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் திருச்சி பைபாஸ் ரோட்டில் இருந்து சிறுமலை அடிவாரம் வழியாக மதுரை ரோடு வரைக்கும் ரிங்ரோடு செல்கிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதில் கிணறுகள் மூடப்படுகின்றன. இதற்கான நிவாரண தொகையை விவசாயிகளுக்கு அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை மனுவினை, கலெக்டர் அலுவலத்தில் மனு அளித்தனர்.

The post விவசாய நிலங்களுக்கு போதிய நிவாரண தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu Farmers' Association ,District Secretary ,Ramasamy ,District President… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...