×

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

 

திருவாரூர், ஜூலை 2: இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஷேமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் குறுவை நெல் பயிருக்கு ஹெக்டருக்கு ரூ.1318.78 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.திருவாருர் மாவட்ட விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னர் விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Shema General Insurance Company ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...