×

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

விராலிமலை, டிச.3: விராலிமலை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விற்பனைக்கு இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விராலிமலை செக்போஸ்ட் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜகிரி குளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன்(73) என்பவர் அப்பகுதியில் உள்ள உணவகம் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் இலுப்பூர் தாலுகா சாலைப்பட்டியை சேர்ந்த கருப்பையா(57) என்பவர் விராலிமலை-இலுப்பூர் சாலை அருகே மது விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் அவரையும் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் ஆயிரத்து 310 -ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post விராலிமலை அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை, இலுப்பூரில் வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்