×

விராலிமலை அருகே ஓட்டல் உரிமையாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

விராலிமலை, ஏப்.26: விராலிமலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் சடலத்தை மீட்ட போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா யாகபுரம் ஒத்தக்கடையை சேர்ந்தவர் ரங்கன் மகன் நடராஜன்(50). இவர், விராலிமலை தாலுகா இ.மேட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி எதிரில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நடராஜன் நேற்று மாலை மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் அவரது ஹோட்டலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து, தகவலின் பேரில் விராலிமலை போலீசார் நடராஜன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடராஜன் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விராலிமலை அருகே ஓட்டல் உரிமையாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Rangan ,Natarajan ,Yagapuram Othakadai ,Marungapuri taluka ,Trichy district ,E. Mettupatti ,Viralimalai taluka… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...