×

விக்கிரமங்கலம் அருகே புகையிலை விற்பனை செய்தவர் கைது

 

தா.பழூர், ஜூன் 26: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஸ்ரீபுரந்தான் மெயின் ரோட்டை சேர்ந்த, இளவரசன் (55) என்பவரது பெட்டி கடையில் சோதனை விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post விக்கிரமங்கலம் அருகே புகையிலை விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Tha.Pazhur ,Ariyalur district ,Vikramangalam Police ,Inspector ,Thiruvengadam ,Sripurandan ,Tamil Nadu government ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...