×

விகேபுரம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

விகேபுரம்,ஏப்.28: விகேபுரம் அருகே வயதான காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லாத விரக்தியில் 90 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகேபுரம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமு அம்மாள் (90). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயதான காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லாத விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post விகேபுரம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Ramu Ammal ,Anavankudiyaruppu ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...