×
Saravana Stores

வாழ்வதற்கே தகுதி இல்லாத சூழ்நிலையில் உள்ள 25 ஆயிரம் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்: சென்னையில் ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை உறுதி தன்மையை ஆய்வு செய்ய 5 வல்லுநர் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜா முத்தையாபுரம், விசாலாட்சி அம்மன் தோட்டம், பருவாநகர் திட்டப்பகுதிகளிலும் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணி அண்ணாநகர் திட்டப்பகுதியையும் வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இவ்வாய்வு குழுவினருடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குடியிருப்புகளை பார்வையிட்டார்.  தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி: 30 முதல் 40 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 23,000 குடியிருப்புகள் சென்னையிலும், 2000 குடியிருப்புகள் இதர பகுதிகளிலும் சிதிலமடைந்து வாழ்வதற்கே தகுதி இல்லாத சூழ்நிலையில் உள்ளது. இவை அனைத்தும் இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டி அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கே வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். …

The post வாழ்வதற்கே தகுதி இல்லாத சூழ்நிலையில் உள்ள 25 ஆயிரம் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்: சென்னையில் ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mo. Anparasan ,Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,Minister ,Tha.Mo.Anparasan ,
× RELATED வீடற்ற ஏழை எளிய மக்களுக்காக இதுவரை...