×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

 

திருப்புத்தூர், ஜூன் 27: திருப்புத்தூர் அருகே திருவுடையார்பட்டி சேர்ந்தவர் தவமணி மகன் வாசகன்(22). இவரது அண்ணன் வெளிநாட்டில் உள்ளார். தங்கை நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் தாயாருடன் திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வந்த வாசகன், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள உத்தரத்தில் சேலையில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீசார், வாசகனின் உடலை கைப்பற்றி திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruputtur ,Vasagan ,Thavamani ,Thiruvudaiyarpatti ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...