நெல்லை,மே15: சீதபற்பநல்லூர் காங்கேயன்குளத்தை சேர்ந்தவர் மகேஷ் (43). வேளார்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 13ம் தேதி மகேஷ் நடந்து சென்ற போது அங்கு வந்த சுரேஷ், கல்லால் தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்ஐ சையது நிசார் அகமது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மகேஷை கல்லால் தாக்க முயற்சித்து மிரட்டல் விடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார், சுரேசை கைது செய்தனர்.
The post வாலிபரை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.
