×

வாலிபரை தாக்கியவர் கைது

 

மதுரை, ஜூன் 24: மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன்(21). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் ஹோட்டலில் பணிபுரியும் முகம்மது அபுபக்கர் சித்திக்(30) என்பவர் திடீரென தகராறு செய்துள்ளார். இதனை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மரக்கட்டையால் மணிகண்டனை தாக்கியுள்ளார். அவருக்கு உதவியாக அங்கிருந்த சக பணியாளர்கள் நவீத், உமர் ஆகியோரும் தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்த தெற்குவாசல் போலீசார் முகம்மது அபுபக்கர் சித்திக்கை கைது செய்தனர்.

The post வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Manikandan ,Gurusamy ,Thidirnagar ,Mohammed Abubakkar Siddique ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...