×

வாடகைவீட்டில் தங்கி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பு தஞ்சை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 3: தஞ்சாவூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துவருவதாகவும் வாடகைக்கு வீடு தருபவர்கள் வாடகை தார்களின் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று தஞ்சை மாவட்ட எஸ்பி கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக காவல்துறை சார்பில் வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்வது, சிப்ட்அடிப்படையில் அதிகப்படியாக இரவு ரோந்து காவலர்களை நியமிக்கவேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் சந்தேகம் வராமல் இருக்க தற்காலிகமாக வாடகை வீடுகளில் தங்கி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு வாடகை வீடு கொடுக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வாடகைத்தாரர்களின் அடையாளத்துடன் கூடிய விபரங்களை சேகரித்து உள்ளுர் காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்திருக்கிறது.

இது சம்பந்தமாக குடியிருப்போர் நல சங்கம் முதலான நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

The post வாடகைவீட்டில் தங்கி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் அதிகரிப்பு தஞ்சை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tanjore District ,SP ,Thanjavur ,Thanjavur District SP ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாவட்டத்தில் இயற்கை...