×

வாசுதேவநல்லூரில் அபாய நிலையில் மின்கம்பம்

 

சிவகிரி,மே 29: வாசுதேவநல்லூரில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட14வது வார்டு கொத்தனார் தெருவில் உள்ள மின்கம்பம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குழந்தைகளும் முதியவர்களும் நடமாடும் இத்தெருவில் இந்த அபாயகரமான மின்கம்பத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த இரு நாட்களாக பலத்த காற்று வீசி வரும் நிலையில் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாசுதேவநல்லூரில் அபாய நிலையில் மின்கம்பம் appeared first on Dinakaran.

Tags : Vasudevanallur ,Sivagiri ,Kothanar Street, Ward 14 ,Vasudevanallur Town Panchayat ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...