×

வளர் இளம் பெண்களுக்கு கல்வி கருத்தரங்கு கூட்டம்

 

கமுதி, ஜூலை 21: கமுதியில், வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அலுவலர் முருகேசன், ஆலோசகர் ஆயிஷாகனி, ஆய்வு கூட நுட்புனர் நாகேஸ்வரன், கணினி மதிப்பீட்டு உதவியாளர் ராணி, மூத்த செவிலியர்தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்னைகளும், அதற்குரிய தீர்வுகளும்குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

The post வளர் இளம் பெண்களுக்கு கல்வி கருத்தரங்கு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kamudi Kshatriya Nadar ,Dinakaran ,
× RELATED தவெக கமுதி ஒன்றியம் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்