×

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

வலங்கைமான், ஜூன் 2: வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4500 மாணவர்களுக்கு விலை இல்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள் சீருடைகள் பள்ளி திறப்பு முதல் நாளே வழங்க ஏற்பாடு. தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் பள்ளி திறக்கப்பட உள்ளதால் 85 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 4500 மாணவர்களுக்கு விலை இல்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகள் சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பதற்கு ஆயத்தமாக பள்ளி வளாகம், வகுப்பறை வளாகம்,சமையலறை கழிவறை,குடிநீர் தொட்டி, பணியினை வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி மற்றும் குமரேசன் இருவரும் பள்ளிகளை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரையும் ஆலோசனையும் கூறினர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மை பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் வகுப்பறை தூய்மைப்படுத்தி உள்ளனர். 50 மாணவர்கள் மேல் சேர்க்கும் பள்ளிக்கு விருது வழங்குவதற்கும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றுவதற்கு ஆசிரியருக்கு அறிவுரையும் தலைமையாசிரியர் கூட்டத்தில்வழங்கப்பட்டது.

The post வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Valangaiman Union Government Schools ,Valangaiman ,Union ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...