×

வலங்கைமான் அருகே இ.கம்யூ, கிளை மாநாடு

 

வலங்கைமான், மே 24: வலங்கைமான் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரையூர் 23 வது கிளை மாநாடு மூங்கில் கொள்ளை தெருவில்பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை மூத்த சாமி ஏற்றி வைத்தார்.ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர் தேவிகா மாநாட்டை வாழ்த்தி பேசினார். கிளைச் செயலாளர் சண்முகம் வேலை அறிக்கைகளையும் வரவு செலவினையும் படித்தார் புதிய பொறுப்பாளர்களை ஒன்றிய செயலாளர் அறிவித்தார்.

புதிய செயலாளராக சண்முகம் துணை செயலாளராக பழனி பொருளாளராக முருகானந்தம் ஒன்றிய மாநாடு காண பிரிதிகளை தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மூங்கில் கொள்ளை தெரு, கரும்பத் தெரு மயான சாலை அமைத்தும் பெரிய வாய்க்காளில் பாலம் கட்டி தர வேண்டும். பழைய மின் கம்பங்கள அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post வலங்கைமான் அருகே இ.கம்யூ, கிளை மாநாடு appeared first on Dinakaran.

Tags : E.Commune ,Valangaiman ,Valangaiman Union Communist Party of India ,Mungil Kollai Street ,Ponnusamy ,Samy ,Joint Secretary ,Senthil Kumar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...