×

வருசநாடு கிராமத்தில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

வருசநாடு, டிச.24: வருசநாடு கிராமத்தில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு கிராமத்தில் உள்ள தெருக்களில் வீட்டு பன்றிகள் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் பன்கறிகள் பல இடங்களில் பல்வேறு சாக்கடைகளை தோண்டி உருண்டு புரண்டு வைகை ஆற்றை சீர்குலைத்து வருகிறது.

வீடுகளில் முறையாக பண்ணை அமைத்து பன்றிகளை பராமரிக்காமல் சாலைகளில் திரியவிடுவதால் அவ்வப்போது பன்றிகளின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும், இந்த பன்றிகள் முறையாக பராமரிப்பின்றி சாக்கடைகளில் சுற்றி திரிகிறது. அவைகள் அப்படியே தெருப்பகுதிகளும் உலாவுவதால் சுகாதார கேடு மட்டுமின்றி நோய்பரவும் சூழலும் உள்ளது. ஆகையால் தெருக்களில் சுற்றித் திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு கிராமத்தில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Varusanadu village ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...