×

வரி விதிப்பு தொடர்பான சிறப்பு முகாம் இன்று துவங்கி 3 நாட்கள் நடக்கிறது

மதுரை, ஜூலை 1: மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி, காலிமனை வரி விதிப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு, தொழில் உரிமம், விளம்பர பலகை அனுமதி மற்றும் குடியிருப்பில் இருந்து வணிக பயன்பாட்டிற்கு மாற்றம் செய்வது உள்ளிட்ட சேவைகள் தொடர்பாக மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இன்று (ஜூலை 1) துவங்கி ஜூலை 3 வரை மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பில்லர் ஹாலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த சிறப்பு முகாமினை

The post வரி விதிப்பு தொடர்பான சிறப்பு முகாம் இன்று துவங்கி 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Municipality ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...