×

வத்தலக்குண்டு தங்கமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமானோர் பங்கேற்பு

 

வத்தலக்குண்டு, மே 19:வத்தலக்குண்டுவில் நடந்த தங்கமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு தங்கமலையில் தங்கமலை முருகன், கல்வி தரும் விநாயகர், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஹோமம் வளர்த்து யாக சாலை பூஜைகள் நடந்தன.

நேற்று லட்சுமி நாராயணசாமிகள் தலைமையிலான குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். வத்தலக்குண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

The post வத்தலக்குண்டு தங்கமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Wattalakundu Thangamalai Murugan Temple ,Kumbabhishekam ,Wattalakundu ,Thangamalai Murugan Temple ,Thangamalai Murugan ,Kalvi ,Tarma Vinayagar ,Pandi ,Muneeswarar ,Wattalakundu Thangamalai ,Thangamalai ,Murugan Temple ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...