×

லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

 

 

திருச்சி, மே8: லால்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ம் ஆண்டு பட்டய படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் மே8 முதல் நடைபெற உள்ளது. நேரடி இரண்டாம் ஆண்டு இயந்திரவியல், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. உரிய படிப்புகளில் சேர மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தொழில் பிரிவில் கணிதம் அல்லது வேதியியல் (ஏதாவது ஒன்று மற்றும் சம்மந்தப்பட்ட தொழிற் பிரிவு பாடங்கள் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.

இல்லையெனில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் இரண்டு ஆண்டு தொழிற்பயிற்சியில் உரிய தொழில் பிரிவில் பயின்று இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ரூ.150 செலுத்தி நேரில் பெறலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.110க்காண கோடிட்ட வங்கி கேட்பு வரை ஓலையை கல்லூரி முகவரிக்கு அனுப்பலாம். அரசாணைப்படி இட ஒதுக்கீடு மற்றும் கல்வி கட்டண உதவித்தொகை பெற்று வழங்க ஆவண செய்யப்படும்.

The post லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Lalgudi Cooperative Polytechnic College ,Trichy ,Lalgudi Polytechnic College ,Lalkudi Cooperative Polytechnic College ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்