×

ரெட் அலர்ட் காரணமாக தேக்கடி படகு சவாரி நிறுத்தம்

 

கூடலூர், மே 25: இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேக்கடி படகு சவாரி மே 27ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது.
இதன் காரணமாக இடுக்கி உட்பட சில மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தேக்கடி உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் எதிரொலியாக தேக்கடியில் படகு சவாரிக்கு வரும் மே 27ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பேரிடர் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மலைப்பகுதிகளில் இரவு நேர பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post ரெட் அலர்ட் காரணமாக தேக்கடி படகு சவாரி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thekkady ,Gudalur ,Idukki district ,Kerala ,Idukki ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...