×

ரெட்டியார்சத்திரம் மயிலாப்பூரில் சாலை பணி துவக்கம்

 

ரெட்டியார்சத்திரம், ஜூன் 26: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறை ஊராட்சிக்குட்பட்ட மயிலாப்பூரில் இருந்து காமாட்சிபுரம் பிரிவு வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இன்பராஜ் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து பூமி பூஜை செய்து சாலை பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி செந்தில்குமரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருளானந்தம், மாவட்ட பிரதிநிதி இளங்கோ பிரிட்டோ, கிளை செயலாளர் கர்த்தர், அவை தலைவர் சூசை, பிரதிநிதி கிறிஸ்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரெட்டியார்சத்திரம் மயிலாப்பூரில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Reddyarchathram Mylapore ,Reddyarchathram ,Bhoomi Pooja ,Mylapore ,Kamatshipuram ,Reddyarchathram Union Ponnimanthurai Panchayat ,DMK South Union ,Inbaraj ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...