×

ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையில் மஞ்சள் நிற ஒட்டு பொறி செயல்முறை விளக்கம்

 

ரெட்டியார்சத்திரம், மே 3: ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் செம்பட்டி ஆர்விஎஸ் பத்மாவதி தோட்டக்கலை பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் மு.அபிநயா,சி.அபிநயா, ஆப்ரீன் பானு, ஆன்டோ ஜெயபிரியா, அனுபிரபா, தனஸ்ரீ ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகள், ெபாதுமக்களுக்கு பயளிக்கக்கூடிய வகையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தாதன்கோட்டையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன், தோட்டக்கலை கல்லூரியின் இணை பேராசிரியர் புனிதவதி தலைமையில் மாணவிகள் வெண்டைக்காய் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தினர். இம்முகாமில் வெண்டைக்காயை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டும் பொறி குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

The post ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையில் மஞ்சள் நிற ஒட்டு பொறி செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Reddyarchatram Dathankottai ,Reddyarchatram ,M. Abhinaya ,C. Abhinaya ,Afreen Banu ,Anto Jayapriya ,Anuprabha ,Thanasree ,Sempatti RVS Padmavathy ,Dathankottai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...