காரிமங்கலம், ஜூலை 1: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து ரூ.14 முதல் ரூ.21வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில், சுமார் ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் கோயில் விழாக்கள் நடக்க உள்ளதால், தேங்காய் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.
