×

ரூ.1.17 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம்

சாத்தான்குளம், மே 12:சாத்தான்குளத்தில் ரூ.1.17 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் பேரூராட்சியில் மூலத்தன மானியத்திட்டத்தில் ரூ1.17 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாரியம்மாள், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் வரவேற்றார்.

இதில் தமிழக மீன்
வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய கட்டிடத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது பேரூராட்சி கவுன்சிலர் மகாராஜன், சாத்தான்குளம் அரசு மருத்துவனைக்கு மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். இதேபோல் பலர் கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்ற அமைச்சர், நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.

இதில் திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாரன், சாத்தான்குளம் தாசில்தார் இசக்கிமுருகேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன், பொன்முருகேசன், அமைச்சர் நேர்முக உதவியாளர் வழக்கறிஞர் கிருபா, மாவட்ட வர்த்தக பிரிவு இனை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.கே.ஜெகன், வழக்கறிஞர் போனிபாஸ், மாவட்ட ஆவின் முன்னாள் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய திமுக அவைத்தலைவர் பால்ராஜ், நகர அவைத்தலைவர் சண்முகசுந்தரம், நகர இளைஞரணி அமைப்பாளர் சுடலைமுத்து கணேஷ், ஒன்றிய வழக்கறிஞர் அணி மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், நகர துணை செயலாளர்கள் வெள்ளப்பாண்டி, மணிகண்டன், வார்டு செயலாளர்கள் மாரிமுத்து, சிவராஜ், வழக்கறிஞர் பவுன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தர், ஜான்சிராணி, இந்திரா, தேவனேசன், மகாராஜன், கற்பகவள்ளி, எம்எல்ஏ உதவியாளர் சந்திரபோஸ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, வைக்குண்டம் தொகுதி இளைஞரணி தலைவர் ஜான்ராஜா, நெல்லை மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் நம்பித்துரை, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் உஷா நன்றி கூறினார்.

The post ரூ.1.17 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Minister ,Anita Radhakrishnan ,Metropolitan Government ,Office ,Building ,SATANKULAM DISTRICT ,New Municipal Office ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...