ராமேஸ்வரம், ஜூன் 25: ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.16 கோடியை தாண்டியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அம்பாள் திருக்கல்யாண முன் மண்டபத்தில் நேற்று உண்டியல் வசூல் எண்ணப்பட்டது. கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில் ராமநாதசுவாமி கோயில் உண்டியல், உபகோயில், யானை பராமரிப்பு, திருப்பணி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட தொகை ரூ.1கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 019, தங்கம் 32 கிராம், வெள்ளி 4 கிலோ 950 கிராம் மற்றும் 91 அயல்நாட்டு பண நோட்டுகள் வசூலாகி இருந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் தேவஸ்தான அலுவலக ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் உழவாரப்பணி தன்னார்வல பக்தர்கள் என 150க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனர்.
The post ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.16 கோடி appeared first on Dinakaran.
