×

ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை பேச்சு முன்னாள் அதிமுக அமைச்சரை கண்டித்து சோழ நாட்டு பட்டாளம் தீர்மானம்

 

தஞ்சாவூர், மே 19: தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள், இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களை ஒன்றிணைத்து செயல்படுகின்ற சோழ நாட்டு பட்டாளத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தன்னலம் கருதாது தாயகம் காக்கும் ராணுவ படை வீரர்களை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்தும், தனது கருத்தை அவர் திரும்ப பெறாவிட்டால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அனைத்து பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முப்படை, ராணுவ படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை பேச்சு முன்னாள் அதிமுக அமைச்சரை கண்டித்து சோழ நாட்டு பட்டாளம் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chola ,AIADMK ,Thanjavur ,Chola Natu Pattalam ,Ariyalur ,Tiruvarur ,Natu Pattalam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...