×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவ மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்-வெள்ள கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவ மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களை மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியதன் காரணமாக, அதன் கீழ் பகுதியில் உள்ள சுமார் 28ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்  அடைந்துள்ளது. இப்பகுதிகளில்  மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் ஆர்.செல்வராஜ்  நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவ மழையினால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து சேதம் ஏற்பட்ட பகுதிகளுக்கு  சென்று பார்வையிட்டு, விவசாயிகளிடமும் சேதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர்  மழையால் பாதிக்கப்பட்ட பயிற்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து  மாவட்டத்தில் மிகவும் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியின்  பங்களா பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.   அப்போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பு மற்றும்  வரத்து நீர், வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்ட விவரங்களை, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின் போது  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொதுப் பணித் துறை உதவி பொறியாளர்கள், சந்திரன், மெய்யழகன், வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம், துணை வேளாண்மை அலுவலர் சேகர்,  வருவாய் அலுவலர் சுபலபிரியா, ஒன்றிய கவுன்சிலர் தீபாகார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகு, தேவி, உட்பட பலர் உடனிருந்தனர்.வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க  நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ் நேற்று  வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு பகுதியை  நேற்று ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனருந்தனர். அப்போது அணைக்கட்டிலிருந்து வெளியேற்றப்படும்  நீரின் அளவு மற்றும் சுற்றுவட்டார கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  அணையின் நீர்மட்டம் ஆகியவற்றை தொடந்து கண்காணிக்கும்படி பொது பணி  துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்….

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவ மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்-வெள்ள கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ranipet District ,Kaveri Pakkam ,Flood Monitoring Officer ,Ranipettai district ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்