×

ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு நாகர்கோவிலில் வரவேற்பு

நாகர்கோவில், மே 19: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராஜீவ் ஜோதி யாத்திரை குழு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் இருந்து புறப்பட்டது. மே 21ம் தேதி காலை 7.30 மணிக்கு பெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றடைகிறது. ராஜீவ் ஜோதி யாத்திரை நேற்று நாகர்கோவில் வந்தது. நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், விவசாய பிரிவு மாநில பொதுசெயலாளர் ஆர்.எஸ்.ராஜன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சகாய பிரவீன், வார்டு தலைவர்கள் பாபு, கிளாட்சன், கந்தசாமி, ஆதிராம், சுயம்புலிங்கம், சந்திரசேகர், ஸ்டாலின் பிரகாஷ், பொதுசெயலாளர் நடேசன், துணை தலைவர் ஆன்றனி, அலெக்ஸ், தொழிற்சங்க நிர்வாகி குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு நாகர்கோவிலில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Jyoti Yatra ,Nagercoil ,Sathya Mangalam ,Erode district ,Rajiv Gandhi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...