கொல்கத்தா: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஊழல் நிறைந்த அரசு என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். ஏராளமான கமிஷன் தொகை மம்தாவின் உறவினர் மூலம் எடுக்கப்பட்டு அது மீண்டும் மம்தாவுக்கே வந்து சேர்கிறது. இதை தடுக்க வேண்டாமா. ரூ.500 கொடுத்தால் என்ன பிரச்சினை என்கிறார் மம்தா. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணம் கமிஷனாகச் செல்லாது எனவும் கூறினார்.
