×

ரயிலில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

ராமநாதபுரம், ஜூன் 30: ராமநாதபுரம் ரயிலில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ 600 கிராம் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். புவனேஸ்வரில் இருந்து நேற்று மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரும் ரயிலில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்த அந்த ரயிலில், ஆரா என்ற பெயருடைய மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு பெட்டியில் கழிப்பறை பகுதியில் புகையிலை பாக்கெட்கள் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 கிலோ 600 கிராம் எடையளவு கொண்ட பறிமுதல் செய்யப்பட்ட அதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும்.

The post ரயிலில் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,RAMANATHAPURAM POLICE ,BHUBANESWAR ,RAMESWARA ,MANAMADURA ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...