×

ரமணவிகாஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

 

சிவகங்கை, மே 10: சிவகங்கை அருகே சோழபுரம், ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் 183 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ஹரிகிருஷ்ணன் 582 மதிப்பெண், மாணவி பிரதிக்ஷா 577 மதிப்பெண், மாணவர் சாய்ராமச்சந்திரன் 576 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

கணினி அறிவியலில் 5 மாணவர்களும், பொருளியல், கணினி பயன்பாடுகளில் ஒரு மாணவரும் என மொத்தம் 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். ஒரு மாணவர் 580 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 4 மாணவர்கள் 570 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 11 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 45 மாணவர்கள் 500 மதிப்பெண்ணுக்கு கூடுதலாகவும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற, சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளித் தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

The post ரமணவிகாஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ramanavikas School ,Sivaganga ,Sri Ramanavikas Higher Secondary School ,Cholapuram ,Plus ,Two ,Harikrishnan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...