×

ரஞ்சி கோப்பை காலிறுதி பெங்கால் ரன் குவிப்பு: சுதிப்குமார் சதம்

பெங்களூரு: ஜார்கண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்துள்ளது.பெங்களூரு, ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஜார்கண்ட்  பந்துவீசியது. பெங்கால் தொடக்க வீரர்கள் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் – அபிஷேக் ராமன்  இணைந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தனர். ராமன்  41* ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்ப (ரிட்டயர்டு ஹர்ட்), அபிமன்யு 65 ரன்னில் (124 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார்.முதல் நாள் முடிவில்,  பெங்கால் முதல் இன்னிங்சில் 1  விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்துள்ளது.   சுதிப்குமார் 106 ரன் (204 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), அனுஸ்தூப் 85 ரன்னுடன் (139 பந்து, 11 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.l மும்பை 304/3: ஆலூரில் தொடங்கிய 2வது காலிறுதியில் டாஸ் வென்று பேட் செய்த மும்பை முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்துள்ளது. பிரித்வி ஷா 21, ஜெய்ஸ்வால் 35, அர்மன் ஜாபர் 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சுவேத் பார்கர் 104  ரன், சர்பராஸ் கான் 69 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  உத்தரகாண்ட்  தரப்பில் தீபக் தபோலா 3 விக்கெட் வீழ்த்தினார்.l கர்நாடகா திணறல்: ஆலூரில் நடக்கும் 3வது காலிறுதியில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. கர்நாடகா முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரவிகுமார் சமர்த் 57 ரன் விளாசினார். உ.பி. தரப்பில் சவுரவ் குமார் 4, ஷிவம் மாவி 3 விக்கெட் வீழ்த்தினர்.l சுருண்டது பஞ்சாப்: ஆலூரில் நடக்கும் 4வது காலிறுதியில்  டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப்,  முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (71.3 ஓவர்). கேப்டன் அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் தலா 47 ரன் விளாச, மல்கோத்ரா 27, சன்விர் சிங் 41 ரன் எடுத்தனர். மத்திய பிரதேசம் தரப்பில்  புனீத் , அனுபவ் தலா 3 விக்கெட் அள்ளினர். மத்திய பிரதேசம் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்துள்ளது….

The post ரஞ்சி கோப்பை காலிறுதி பெங்கால் ரன் குவிப்பு: சுதிப்குமார் சதம் appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy Quarter Final ,Bengal ,Run ,Sudipkumar Century Bengaluru ,Ranji Cup ,Jharkhand ,
× RELATED பெண் பயிற்சி மருத்துவா் கொலை விவகாரம்:...