சென்னை : யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான். படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நான் படித்த கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கையில் பட்டங்களோடு, மனதில் கனவுகளோடு இருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் வாழ்த்தவில்லை. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன்.அரசியலில் ஆர்வம் இருந்ததால் முழுமையாக என்னை நான் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. 1971 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராக சென்று நடத்தினேன். கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போதே எனக்கு அரசியல் மீது ஆர்வம் வந்தது. இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் கைதான போது போலீஸ் பாதுகாப்போடு மாநிலக் கல்லூரிக்கு வந்து பரீட்சை எழுதினேன். கல்வியை கட்டாய கடமையாக வலியுறுத்தி ஒரு இயக்கமாக தொடங்கி இருக்கிறேன்.யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான்.படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி இந்த மாநிலக் கல்லூரி.சென்னை பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் மாநிலக் கல்லூரி. படித்து, வளர்ந்து, முன்னேறி அனைவருக்கும் எடுத்துக் காட்டாக திகழ வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள், விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரி மாநிலக் கல்லூரி.மாநிலக் கல்லூரியில் 2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே தாங்கும் விடுதி அமைக்கப்படும். ‘என்றார். …
The post யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான்; படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு :முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.