×

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்

கேடிசிநகர், ஏப்.22: மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்துவைத்தார். நெல்லை அருகே மேலச்செவல் டிடிடிஏ உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட 3 வகுப்பறைகளின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ராபர்ட் புரூஸ் எம்.பி., புதிய வகுப்பறைகளை திறந்துவைத்தார். விழாவுக்கு நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் முன்னிலை வகித்தார். மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்வில் நெல்லை திருமண்டல உயர்நிலைப்பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், தென் மேற்கு சபை மன்றத்தலைவர் பாதிரியார் அருள்ராஜ் பிச்சைமுத்து வாழ்த்திப் பேசினர். முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டாரத்தலைவர் ரூபன் தேவதாஸ், வைகுண்டதாஸ், அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங், நல்லூர் பால்ராஜ், கொங்கந்தான்பாறை ரிச்சர்டு ஜேம்ஸ் பீட்டர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளித்தாளாளர் செல்வின் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் நன்றி கூறினார்.

The post மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் appeared first on Dinakaran.

Tags : Melacheval DTDA School ,KTC Nagar ,Robert Bruce MP ,Melacheval DTDA High School ,Nellai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...