×

மெகா ஆதார் சிறப்பு முகாம்

 

தஞ்சாவூர், ஜூன் 27: தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மெகா முகாம் நடைபெற்று வருவதாக தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி கூறியதாவது:
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அறிவுறுத்தலின்பேரில் மெகா ஆதார் சிறப்பு முகாம் 16.06.2025 முதல் 15.07.2025 வரை தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள், தஞ்சாவூர், மன்னார்குடி மற்றும் பாபநாசம் உட்பட ஆதார் சேவை மையம் உள்ள துணை அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
எனவே இந்த முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதார் பதிவு, பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம், கைரேகை, புகைப்படம் புதுப்பித்துக் கொள்ளலாம். புதிதாக ஆதார் பதிவு செய்தல் இலவசமாகவும், பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50 மற்றும் கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ள இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மெகா ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mega Aadhaar Special ,Camp ,Thanjavur ,Thanjavur Divisional Senior ,Superintendent ,Thanjavur Postal ,Division ,Divisional Senior Superintendent ,Thangamani ,Mega ,Aadhaar ,Special ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...