×

முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் நல்லமாணிக்கர் கோவில் சித்திரை திருவிழா புஷ்ப பல்லக்கு ஊர்வலம்

 

முத்துப்பேட்டை, ஏப். 28: முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் நல்லமாணிக்கர் கோவில் சித்திரை திருவிழா புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ள நல்லமாணிக்கர் சாமிகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு என பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டு. இந்தநிலையில் இக்கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, நல்லமாணிக்கர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று 27ஆம் தேதி குன்னலூர் வசந்த மண்டபத்திலிருந்து திருவுருவ மூர்த்திகள் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி வழங்கும் வைபவம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்தடைந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
இன்று பத்ரகாளி அம்மனுக்கு காவடி அபிஷேகமும், நல்ல மாணிக்கர் சுவாமிகளுக்கு வருடோற்சவமும் நடைபெறுகிறது. இன்று திருவுருவச் மூர்த்திகள் குன்னலூர் வசந்த மண்டபம் திரும்பி அருளாசி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது

The post முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் நல்லமாணிக்கர் கோவில் சித்திரை திருவிழா புஷ்ப பல்லக்கு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Kagakanatharkulam Nallamanikkar Temple Chitri Festival Pushba Pallaku Procession ,Muthuppet ,Muthuppettai, Ap. 28 ,Muthuppettai ,Kagaganatharkulam Nallamanikkar Temple Chitri Festival Pushba Palak ,Nallamanikkar ,Samigl ,Kapaganatharkulam ,Muthuppet, Thiruvarur district ,Kapaganatharkulam Nallamanikkar Temple Chitrai Festival Pushpa Pallaku Procession ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...