×

முத்துப்பேட்டை அருகே உழவரைத் தேடி உழவர் நலத்துறை வேளாண்மை முகாம்

 

முத்துப்பேட்டை, மே 31: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் கிராமத்தில் உழவரைத் தேடி உழவர் நலத்துறை வேளாண்மை முகாம் நடைபெற்றது.
உழவரைத் தேடி உழவர் நலத்துறை திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் வலங்கைமான் வட்டாரம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நன்னிலம், நீடாமங்கலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய 10 வட்டாரத்தில் தலா இரண்டு இடங்களில் உழவரைத் தேடி உழவர் நலத்துறை வேளாண்மை முகாம் நடைபெற்றது.

 

The post முத்துப்பேட்டை அருகே உழவரைத் தேடி உழவர் நலத்துறை வேளாண்மை முகாம் appeared first on Dinakaran.

Tags : Welfare Department Agriculture ,Camp ,Muthupettai ,Welfare ,Department ,Agriculture ,Ariyalur ,Muthupettai, Tiruvarur district ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Farmers Welfare Department ,Farmers Welfare Department Agriculture Camp ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...